தமிழ்நாட்டில் எட்டிப்பார்த்த கொரோனோ 27 பேருக்கு தொற்று பாதிப்பு!

by Editor / 31-05-2025 10:44:48am
தமிழ்நாட்டில் எட்டிப்பார்த்த கொரோனோ 27 பேருக்கு தொற்று பாதிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,170 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 227 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவில் மொத்த பாதிப்பு 1,147 ஆக உயர்ந்துள்ளது. 7 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் எட்டிப்பார்த்த கொரோனோ 27 பேருக்கு தொற்று பாதிப்பு!

Share via

More stories