கீரை கட்டு ஊழல்: அதிர்ந்து போன தென்காசி... ஓய்வு பெறும் நாளில் சஸ்பென்ட்டான அலுவலர்.

by Editor / 31-05-2025 10:59:00am
கீரை கட்டு ஊழல்: அதிர்ந்து போன தென்காசி... ஓய்வு பெறும் நாளில் சஸ்பென்ட்டான அலுவலர்.

தென்காசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்க கீரைக்கட்டுகள் வாங்கப்பட்டது. கடந்த 2022 - 2023 காலகட்டத்தில் 30 ரூபாய்க்குள் வாங்க வேண்டிய ஒரு கிலோ கீரையை, 80 ரூபாய்க்கு வாங்கியதாக பில்களில் திருத்தம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வாயிலாக, 6 .59 லட்சம் ரூபாய் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

தென்காசி சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் நிர்வாக அலுவலரான  பத்மாவதி, இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்து பத்மாவதி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டர்  மே மாதம்( இன்று ) 31ம் தேதி அவர் ஓய்வு பெற வேண்டும். 


தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்ட போது, தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் ஒரு கிலோ கீரை கட்டுவை ரூ.80 வாங்கி ஊழலில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு விசாரணையில் இருப்பதாகவும்  சான்றிதழ் கொடுத்துள்ளது. ஆனால், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக இருந்த பத்மாவதி பணியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்பதாக போலி சான்றிதழ் ஒன்றை தயாரித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார். 

சந்தேகம் அடைந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் இது தொடர்பாக தென்காசி மருத்துவமனை நிர்வாகத்தில் கேட்டுள்ளார். அப்போது, தாங்கள் கொடுத்த சான்றிதழ் இது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, இன்று பத்மாவதி ஓய்வு பெற இருந்த நிலையில், நேற்றைய தினம் அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது .

 

 

Tags : கீரை கட்டு ஊழல்: அதிர்ந்து போன தென்காசி... ஓய்வு பெறும் நாளில் சஸ்பென்ட்டான அலுவலர்

Share via