கம்யூ.கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 97வது பிறந்த நாள் வைகோ நேரில் வாழ்த்து

கம்யூ.கட்சியின் மூத்த தலைவர் பொதுவுடைமைப் போராளி தோழர் நல்லகண்ணுவின் 97ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று நல்லகண்ணுவை சந்தித்து மலர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.இந்த நிகழ்ச்சியின் பொது வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சுஜீவன், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கே.கழககுமார், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சைதை ப.சுப்பிரமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags :