மத்திய அமைச்சர் முரளீதரன் கார் மீது உருட்டு கட்டைகளால் கிராம மக்கள் தாக்குதல்

மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் முரளீதரனின் கார் மீது அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம்" பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. தேர்தல் முடிந்ததையடுத்து அங்கு பாரதிய ஜனதா கட்சியினர் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், மேற்குவங்கத்தின் மிட்னாபூரில் மத்திய அமைச்சர் முரளீதரன் சென்ற கார் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. கற்கள் மற்றும் கட்டகளைக் கொண்டு தனது கார் தாக்கப்பட்ட வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முரளீதரன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
Tags :