கோவில்பட்டியிலிருந்து நெல்லைக்கு வந்த முதல்வர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கோவில்பட்டி நகரில் இளையரசனேந்தல் சாலையில் கலைஞர் அறிவகம் என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக நகர கழக அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.அலுவலக முகப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வெண்கல சிலையையும் திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக சார்பில் கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வெள்ளி செங்கோல் வழங்கினர். இதனை தொடர்ந்து புதிய கட்சி அலுவலகத்தையும் அலுவலகத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் பார்வையிட்டார், நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கனிமொழி கருணாநிதி, தமிழகஅமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சாலை மார்க்கமாக நெல்லை புறப்பட்டு சென்றார்
Tags : கோவில்பட்டியிலிருந்து நெல்லைக்கு வந்த முதல்வர்.



















