படிம எரிபொருளை மாற்ற துபாய் மாநாட்டில் தீர்மானம் - வரவேற்பு

by Staff / 14-12-2023 01:21:40pm
படிம எரிபொருளை மாற்ற துபாய் மாநாட்டில் தீர்மானம் - வரவேற்பு

புவிவெப்பமயமாதலின் தீயவிளைவுகளுக்கு முடிவு கட்டும் நோக்குடன் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற படிம எரிபொருள்களிலிருந்து படிப்படியாக மாறுவதற்கு துபாயில் நடைபெற்ற 28-ஆம் காலநிலை மாற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது நல்ல தொடக்கம் மேலும் நல்ல முடிவாகட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புவிவெப்பமயமாதலின் தீயவிளைவுகளுக்கு முடிவு கட்டும் நோக்குடன் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற படிம எரிபொருள்களிலிருந்து படிப்படியாக மாறுவதற்கு துபாயில் நடைபெற்ற 28-ஆம் காலநிலை மாற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்தத் தீர்மானத்தில் ஏராளமான குறைகள் உள்ளன என்றாலும் கூட, அது காலநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காப்பதற்கான நல்லத் தொடக்கம் ஆகும்.

 

Tags :

Share via