மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,040-வது சதய விழா
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,040-வது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். இந்த சிறப்பு விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வேறொரு நாளில் பணி நாளாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,040-வது சதய விழா



















