ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25000 கனடியாக அதிகரிப்பு-பரிசல் இயக்க தடை.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதே போல், தமிழக எல்லைக்கான நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையால், கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.இன்று காலை 6 மணி நிலவரபடி வினாடிக்கு 25000 கனடியாக அதிகரித்துள்ளது.
Tags :