விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி 

by Editor / 28-12-2024 11:21:21am
விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி 

 தேமுதிக தலைவர்  விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜயகாந்த் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இந்த நிலையில் தேமுதிக தலைவர்  விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதனையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏராளமான ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் குவிந்து வருகின்றனர்.

விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க தேமுதிக முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி தேமுதிகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.

 

Tags : விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி 

Share via