இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி ரகத்தை சேர்ந்த ‘எல்விஎம்-3’ கருதப்படுகிறது.

by Staff / 23-10-2022 02:29:50pm
இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி ரகத்தை சேர்ந்த ‘எல்விஎம்-3’ கருதப்படுகிறது.


இதன் மூலம், ஒரே நேரத்தில் 36 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோஜெனிக் வகை எந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது. இதில் ஏவப்பட்ட 36 செயற்கைக்கோள்களும் 640 டன் எடை கொண்டவை. வர்த்தக ரீதியாக முதல் முறையாக இந்திய ராக்கெட் அதிக டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து செல்கிறது. குறைந்த உயர புவி சுற்று வட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படுகிறது. தகவல் தொடர்பு வசதிக்காக 36 செயற்கைக்கோள்களும் ஏவப்படுகின்றன. இன்று அதிகாலை 12.07க்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

 

Tags :

Share via

More stories