பாமக போட்டியிடவில்லை அன்புமணி ராமதாஸ்

by Staff / 21-01-2023 03:47:31pm
பாமக போட்டியிடவில்லை அன்புமணி ராமதாஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அந்த தேர்தலில் தாம் யாருக்கும் ஆதரவும் தரப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடைத்தேர்தல்கள் தேவையற்றவை, மக்களின் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை, ஒரு சட்டமன்ற உறுப்பினர் காலமானால், அங்கு இடைத்தேர்தல் நடத்தாமல், எந்த கட்சி வெற்றி பெற்றதோ, அதே கட்சியை சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம் என்பதே பாமகவின் நிலைபாடு என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo