அதிமுகவினர் யாரும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கையெழுத்து கேட்டால் கையெழுத்து போடக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன் கட்சி நிர்வாகிகளுக்கு அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அதிமுக பொது குழுவை கூட்டுவதற்காக எஸ் பி வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் ஆகியோர் தலைமையிலான அதிருப்தி குழுவினர் கையெழுத்து வேட்டையில் இறங்கி உள்ள நிலையில் யாரிடமும் கையெழுத்து போட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தல் தோல்விகள் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சுமைத்தி ஒரு தலை பட்சமான செயல்பாடுகள் தோல்விக்கு காரணம் என்றும் அதனால் அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக பொது குழு மற்றும் செயற்குழுவை கூட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர்களான எஸ் பி வேலுமணி சிபி சண்முகம் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர் இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களும் கையெழுத்து வாங்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை நேரில் சந்திக்கும் மற்றும் தொடர்பு கொள்ளும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் யாராவது பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்று உங்களிடம் கையெழுத்து கேட்டால் எக்காரணம் கொண்டும் கையெழுத்திட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டதோடு கொரடா உத்தரவை மீறி தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்ததாக கூறி எம் பி மற்றும் எம்எல்ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆகி வருகிறது. இடையே தங்களை கட்சிப்பதிவியல் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கியது செல்லாது என்று வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் அணியினர் எதிர் நிலையில் செயல்பட்டு வருகின்றனர் அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் மட்டுமே கட்சி கொறடாவை நியமிக்க முழு அதிகாரம் படைத்தவர் என்றும் கட்சி விதிகளை மீறுபவர்கள் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் . எடப்பாடி பழனிச்சாமி-வேலுமணி சி.வி. சண்முகம் அணிகளுக்கு இடையே ஆதிக்க போட்டி உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது.
Tags :


















