நெதர்லாந்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் மோடியை வெளியுறவு அமைச்சர் டாம் பெரென்ட்சன் வரவேற்றார்.
நெதர்லாந்து ராணுவத் தலைவரான ரியர் அட்மிரல் லுட்கர் புரும்மெலார் மற்றும் நெதர்லாந்திற்கான இந்தியத் தூதர் குமார் துஹின் ஆகியோரும் நேரில் வரவேற்றனர்
.இந்திய வம்சாவளியினரின் கலைநிகழ்ச்சிகள் தி ஹேக் நகரில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான வம்சாவளியினர் மோடி- மோடி என கோஷமிட்டு பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்
கதக், பரதநாட்டியம், ஒடிசி, குச்சிப்புடி, மோகினியாட்டம் மற்றும் குஜராத்தின் பாரம்பரிய கர்பாநடனம் உள்ளிட்ட பல்வேறு இந்தியக் கலைநிகழ்ச்சிகளை கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டினர்.
பிரதமர்தம் எக்ஸ்தளத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.பயணத்தின் முக்கிய நோக்கங்கள்இருதரப்பு பேச்சுவார்த்தை: நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், செமிகண்டக்டர்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர், ராணி மாக்சிமா ஆகியோரையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேசுகிறார் சமீபத்தில் கையெழுத்தான இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான முதலீடுகளை மேலும் அதிகரிக்கும்என்று எதிர்பாா்க்கப்படுகிறது.
Tags :



















