முதலமைச்சர் விஜயின் இல்லத்தில் தனிச் செயலாளர் ஆலோசனை

by Admin / 16-05-2026 04:00:25pm
முதலமைச்சர் விஜயின் இல்லத்தில் தனிச் செயலாளர் ஆலோசனை

தமிழக முதலமைச்சரின் தனிச் செயலாளர் செந்தில்குமார் தமிழக பொறுப்புஆளுனர்  ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஏற்கனவே பதவி ஏற்ற 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு மற்றும் புதிய அமைச்சரவை விரிவாக்கம் குறித்த கோப்புகள் ஆளுனரிடம்  வழங்கப்பட்டதாகவும் ஆளுநரை சந்தித்தபின் தனிச் செயலாளர் செந்தில்குமார் சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜயின் இல்லத்திற்கு சென்று அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.  முதலமைச்சர் விஜயுடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் பதவி ஏற்று ஒரு வாரம் கடந்த நிலையில் அரசு பணிகளை செவ்வனே செய்யும் பொருட்டு அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்க வேண்டிய தருணத்தில் அரசு உள்ளதால் அதன் காரணமாக இந்த சந்திப்பும் ஆலோசனையும் நடந்து வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo