இரண்டு கர்ப்பிணி பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு பார்த்த சுகாதாரத்துறை இணை இயக்குனர்.
தென்காசி மாவட்டத்தில் இரண்டு தினங்களாக கன மழை பெய்து வந்தது இந்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக இரண்டு கர்ப்பிணி பெண்கள் அருகில் உள்ள கிராமங்களைச் சார்ந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் இந்த நிலையில் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாததின் காரணமாகவும் தென்காசி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் விடுமுறையில் சென்றதின் காரணமாகவும் மணிமேகலை,கலைச்செல்வி ஆகிய இரண்டு கர்ப்பிணி பெண்களுக்கு இன்று 13 ஆம் தேதி செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு பணிக்காக வந்த தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் உடைய இணை இயக்குனர் பிரேமலதா அவர்கள் இரண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கும் அறுவை சிகிச்சை மூலமாக அவசர கால மகப்பேறு பிரசவம் சிகிச்சை மேற்கொண்ட இதில் இரண்டு தாய்களின் குழந்தைகளும் நல்ல முறையில் பிரசவம் முடித்து அவர்களிடம் வழங்கப்பட்டது ஆய்வுக்காக வந்த சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் அவர்களின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Tags : இரண்டு கர்ப்பிணி பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு பார்த்த சுகாதாரத்துறை இணை இயக்குனர்.