காதல் ஜோடி தற்கொலை முயற்சி - காதலன் உயிரிழப்பு - காதலி உயிர் ஊசல்

by Editor / 26-12-2021 11:40:09am
காதல் ஜோடி தற்கொலை முயற்சி - காதலன் உயிரிழப்பு -  காதலி உயிர் ஊசல்

திருச்சி மண்ணச்சநல்லூரில் உள்ள இந்திராநகரில் உள்ள உறவினர் வீட்டில்  புதுக்கோட்டை மாலையீடு பகுதியைச் சேர்ந்த வினிஸ் ( 28),திருநெல்வேலிமாவட்டத்திலுள்ள ஒரு ஊரில் சிட்டி யூனியன் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.இவர் மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த நிவேதா ( 25 )  என்பவரை பல ஆண்டுகாலமாக காதலித்து வந்துள்ளார்.இந்த நிலையில் இவரகளது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்புத்தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து காதலர்களான இருவரும்  வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.அங்குவைத்து தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றதில் 
காதலன் வினிஸ் பரிதாபமாக  பலியான நிலையில் நிவேதா கழுத்தில் மற்றும் கையில் ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்..மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்தில் வினிஸின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories