ரூ.45 லட்சம் மதிப்புள்ள 370 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தபோலீசார்.

by Editor / 31-07-2023 12:41:13pm
 ரூ.45 லட்சம் மதிப்புள்ள  370 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தபோலீசார்.

உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி காவல் நிலைய போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் கண்டெய்னர் லாரியில் இருந்து 370 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கவுதம் புத்நகரில் நேற்று சோதனை நடத்தியபோது சந்தேகத்திற்கிடமான லாரி ஒன்று அவ்வழியாக கடந்து சென்றது. சந்தேகமடைந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ரூ.40-45 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. இது குறித்து இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories