தமன்னா விதவிதமான நிலையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
ஜெய்லர் படத்தின் காவலா பட பாடலுக்கு பின்பு தமன்னாவின் புகழ் மீண்டும் உச்சத்திற்கு ஏறி இருக்கிறது. ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து ,நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
காவலா பாடல் உலகமெங்கும் பெரிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளது .கிட்டத்தட்ட எட்டு கோடி பேருக்கு மேலாக அந்த பாடல் காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார்கள். பல நாட்டைச் சார்ந்தவர்களும் மொழியை சார்ந்தவர்களும் இந்த பாட்டினுடைய இசை தன்மையின் காரணமாக நடனத்தின் மீது உள்ள ஈா்ப்பின் காரணமாகவும் அவரவர்களுடைய மொழிகளில்பாடலுக்கு ஆடி இதை காட்சி பதிவு செய்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் கடந்த இருபத்தி எட்டாம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த ஜெயிலர் படத்தினுடைய இசை வெளியீட்டு ரஜினிகாந்த் ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடந்தேறியது இதில் ரஜினி மதுவால் தான் அடுத்த கட்டத்திற்கு போக முடியவில்லை என்று வேதனைப்பட்டதோடு சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றியும் பேசினார் .இதற்கு பதிலளிக்கும் விதமாக ரம்யா கிருஷ்ணன் மேடையில் தோன்றி படையப்பா படத்தின் காட்சி வசனத்தை பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தமன்னாவின் சிவப்பு கலர் உடை ரசிகர்களை மிக வெகுவாக கவர்ந்தது .அவரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் சமூக ஊடக தளத்தில் விதவிதமான நிலையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
Tags :