உலகப் புகழ்பெற்ற ஆழித் தேரோட்டம் தொடங்கியது

திருவாரூர் மாவட்டத்தில் இன்று உலகப் புகழ்பெற்ற ஆழித் தேரோட்டம் தொடங்கியது. இந்த ஆழித் தேரோட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், அறநிலையத் துறை அதிகாரிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு உலக புகழ் பெற்ற ஆழித் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக அதிகாலை 5.15 மணியளவில் விநாயகர் தேர் மற்றும் சுப்ரமணியர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
Tags :