கொரோனா அதிகரிப்பு - பரிசோதனைகள் தீவிரம்
உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தெலங்கானாவின் ஷாம்ஷாபாத் விமான நிலையத்தில் கோவிட் தொற்று பரிசோதனைகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். இதற்காக தெர்மல் ஸ்கிரீனிங் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 100 சர்வதேச பயணிகளில், தொற்று அறிகுறியுள்ள 2 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா அறிகுறி உள்ள பயணிகள் முகக்கவசம் அணியவும், உடல் இடைவெளியை கடைபிடிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Tags :