நடிகை ஜெயதேவி காலமானார்

by Staff / 05-10-2023 11:55:10am
நடிகை ஜெயதேவி காலமானார்

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநராக வலம்வந்த பிரபல இயக்குநர் மற்றும் நடிகை ஜெயதேவி (65) இன்று காலமானார். நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயதேவி, தமிழில் ஜெமினி கணேசன் நடிப்பில் 1976-ல் வெளியான 'இதயமலர்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனையடுத்தும் ஜெய்சங்கருடன் 'வாழ நினைத்தால் வாழலாம்', ரஜினிகாந்துடன் 'காயத்ரி', 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு', 'மற்றவை நேரில்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக இதயம் தொடர்பான பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Tags :

Share via