திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீட்டில் ஐ.டி. ரெய்டு
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் இன்று 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் விடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags :



















