ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து உண்டு அது போன்று காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு கருத்து உண்டு.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்று தமிழக முதலமைச்சர் பேசியதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் எதிர் வினையாற்றிக் கொண்டிருக்கின்ற நிலையில்,ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து உண்டு அது போன்று காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு கருத்து உண்டு. முதலமைச்சர் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒத்துப்போகும். இதனால் கூட்டணிக்கு குழப்பம் உருவாகி இருக்கிறது என்பது பொருள் அல்ல . எங்களுடைய ஒரே கருத்து அகில இந்திய தலைமையும் தமிழக முதலமைச்சரும் பேசி இது குறித்து முடிவெடுப்பார்கள்என்று.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை தம் கருத்தை வெளிப்படுத்தினார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அடங்கிய குழு இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை சந்தித்து பேசுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாக குழு அமைத்து பேச்சு வார்த்தைக்கு 70 நாளுக்கு மேலாகியும் இன்னும் பேச்சு வார்த்தைக்கு திமுக அழைக்கவில்லை , ஆட்சியில் பங்கு, எத்தனை தொகுதி என்கிற விஷயத்தை குழு அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் தெரிவிக்கும் என்று எதா்பாா்க்கப்படுகிறது.
Tags :


















