வங்கதேச எம்.பி., கொலை வழக்கு சிஐடியிடம் ஒப்படைப்பு

by Staff / 23-05-2024 01:43:10pm
வங்கதேச எம்.பி., கொலை வழக்கு சிஐடியிடம் ஒப்படைப்பு

கொல்கத்தாவில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த எம்.பி., கொலை செய்யப்பட்ட வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வங்கதேச ஆளும் கட்சியான அவாமி லீக் எம்.பி., அன்வருல் அசிம் அன்வர் கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்டார். அன்வருல் கடந்த 12ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா வந்தார். அன்றைய தினம் பிதான் நகரில் உள்ள வீட்டிற்கு தனது நண்பர்களுடன் சென்றார்.
அதன் பிறகு அவர் காணாமல் போனார். வங்கதேசத்தில் உள்ள அவரது மகள் அளித்த புகாரின் பேரில் கடந்த 18ஆம் தேதி பராநகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வங்கதேசத்தை சேர்ந்த மூன்று பேரை வங்கதேச போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via