பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை-கருத்து பதிவு செய்த போலீஸ்காரர்சஸ்பெண்ட்
வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் அன்பரசன். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக வெளியான பதிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது கருத்தை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அன்பரசனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
Tags : பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை-கருத்து பதிவு செய்த போலீஸ்காரர்சஸ்பெண்ட்