அணு ஆயுத சோதனைகளை உடனடியாக மீண்டும் தொடங்குமாறு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவு-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
 
 
                          அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மற்ற நாடுகளின் அணு ஆயுத சோதனைத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு அணு ஆயுத சோதனைகளை உடனடியாக மீண்டும் தொடங்குமாறு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
1992 ஆம் ஆண்டு முதல் 33 ஆண்டுகால இடைநிறுத்தம் அமெரிக்கா கடைபிடித்து வந்த அணு ஆயுத சோதனை மீதான தற்காலிகத் தடையை இந்த உத்தரவு முடிவுக்குக் கொண்டுவருகிறது.
 
ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் தங்கள் அணுசக்தி திட்டங்களைச் சோதிப்பதால், அமெரிக்காவும் "சமமான அடிப்படையில்" சோதனைகளை நடத்த வேண்டியது அவசியம் என்று டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
ரஷ்யா, சமீபத்தில் புரேவெஸ்ட்னிக் அணுசக்தி ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால் ட்டிரம்ப்பின் திடீர் அறிவிப்பு உலக அரங்கில் பெரும் பரபரப்பையும் புதிய அணு ஆயுதப் போட்டியின் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா விரிவான அணு ஆயுத சோதனை-தடை ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டிருந்தாலும், செனட் அதை அங்கீகரிக்கவில்லை என்பதால், அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்க உள்நாட்டு அல்லது சர்வதேச சட்டம் தடையாக இல்லை.
இருப்பினும், இத்தகைய சோதனைகளை மீண்டும் தொடங்குவது பாதுகாப்பு, நெறிமுறை ரீதியாக பல சவால்களை எதிர்கொள்கிறது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்
Tags :


















