ரூ.20 லட்சத்தை திருடி கொடுத்த காதலி.. பணத்துடன் காதலன் எஸ்கேப்

by Editor / 16-06-2025 01:48:44pm
ரூ.20 லட்சத்தை திருடி கொடுத்த காதலி.. பணத்துடன் காதலன் எஸ்கேப்

சென்னையில், காதலன் கேட்டதற்காக வீட்டில் இருந்த ரூ.20 லட்சத்தை காதலி திருடிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயலில் உள்ள கல்லூரியில் பயின்று வரும் ஒரு மாணவி, அதே கல்லூரியில் பயிலும் மாணவரை காதலித்து வந்துள்ளார். அம்மாணவர், கார் வாங்க வேண்டும் என காதலியிடம் தனது விருப்பத்தை கூறியுள்ளார். இதனால், வீட்டில் இருந்து ரூ.20 லட்சத்தைத் திருடிய மாணவி, காதலனுக்கு கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய மாணவர் எஸ்கேப் ஆன நிலையில், போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் அளித்துள்ளார்.

 

Tags :

Share via