ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்

by Editor / 04-04-2025 03:48:31pm
ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் ஜூலை 3 வரை வியாழக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு கோவையிலிருந்து பகத் கி கோதிக்கு சிறப்பு ரயில் (எண்: 06181) புறப்படும். இந்த ரயில் சனிக்கிழமைகளில் காலை 11.30 மணிக்கு பகத் கி கோதி ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், ஏப்ரல் 13 முதல் ஜூலை 6 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11 மணிக்கு பகத் கி கோதி ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு சிறப்பு ரயில் (எண்: 06182) புறப்படும். இந்த ரயில் புதன்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கூட்டி, குர்னூல் சிட்டி, கச்சிகுடா, நிஜாமாபாத், வாசிம், அகோலா, சூரத், வதோதரா, சபர்மதி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via