படகு கவிழ்ந்ததில் ஏழு பெண்கள் மூன்று ஆண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாப் மாநில உறுதியானவைச் சார்ந்த 25 முதல் 30 பக்தர்கள் மதுரா அருகே பிருந்தாவனத்தில் உள்ள கே .சி. கார்ட் பகுதியில் ஆற்றில் படகில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது படகு இரும்பு மிதவை பாலத்தில் மோதியதால் நிலை தடுமாறி படகு கவிழ்ந்ததில் ஏழு பெண்கள் மூன்று ஆண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பலத்த காற்று வீசியது படகு மோதியதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்திற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags :


















.jpg)
