கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.

by Staff / 13-04-2022 01:47:50pm
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.

தென் ஆப்பிரிக்கா நாட்டின் டர்பன் மாகாணம் குவாஹுலு-நடாலா நகரில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதன் காரணமாக குவாஹுலு-நடாலா நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள நிலையில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது.

வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இந்த வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். 

இந்த இயற்கை பேரிடரில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணியை மீட்புக்குழுவினர் துரிதப்படுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via