ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை - முதல்வர் பெருமிதம்

by Editor / 02-06-2025 01:42:43pm
ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை - முதல்வர் பெருமிதம்

பெண்கள் பாதுகாப்பில் வேஷமிடும் நபர்களுக்கு காவல்துறை தனது செயலால் பதில் அளித்துள்ளது என தமிழ்நாடு முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டி வெளியிட்டுள்ள X பதிவில், "இவ்வழக்கை 5 மாதத்தில் விசாரித்து குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. காவல்துறையின் செயல்பாடுகளை நீதிமன்றமும் பாராட்டியுள்ளது" என கூறியுள்ளார்.

 

Tags :

Share via