"கொடூர ஆட்சியை மறைக்கவே தீர்மானம்" - திமுகவை தாக்கிய எல்.முருகன்

மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டமானது இளவரசருக்காக நடத்தப்பட்டதாக பாஜக மத்திய அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார். மேலும், “திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வேடிக்கையாக இருக்கின்றன. கொடூர ஆட்சியை மறைக்கவே மத்திய அரசை கண்டித்து திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறை சொல்ல ஏதும் இல்லாததால் பூச்சாண்டி அரசியல் செய்யும் அவலம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது” என்றார்.
Tags :