மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.12.35 கோடி ஒதுக்கீடு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.12.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் எனவும் ஆர்டிஐ கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2015-ல் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடி, 2019 ஜனவரி 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
Tags :