நீதி மன்றம் சன் பிக்சர்ஸ் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் கூலி. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து சன் பிக்சர்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. .18 வயதுக்கு உட்பட்டவர்கள் படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாது என்பதை தெளிவு படுத்தியதோடு பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 5 கீழ் யு ஏ சான்றிதழ் கோரி தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீராகரித்துள்ளது.. இப்படத்தில் கடுமையான அச்சுறுத்தல்கள், கொடூரமான கொலைகள் ,புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் காட்சிகள் இருந்ததால் அதற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு உரைக்கப்பட்டது, அடுத்து இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளை நீக்குவதற்கு சன் பிக்சர்ஸ் ஒத்துக் கொள்ளாததின் காரணமாக இப்படம் பெரியவர்களுக்கு மட்டும் என்கிற சான்றிதழை வழங்கி உள்ளதாக சொல்லப்பட்டது. சன் பிக்சர்ஸ் சார்பில் தமிழ் படங்களில் வழக்கமான சண்டை காட்சிகள் இருக்கும் என்று எடுத்து வைத்த கருத்திற்கு தணிக்கை குழு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்தார்.. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம் சன் பிக்சர்ஸ் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது...
Tags :