நடிகர் சூரியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

by Staff / 19-04-2022 01:40:33pm
 நடிகர் சூரியிடம்  மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபி யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரி புகார் ஒன்றை அளித்தார்.

புகாரின் மீது நடவடிக்கை இல்லை எனக்கூறி, சூரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அதனை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன் ஆறு மாத காலத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த பண மோசடி புகாரில் நடிகர் சூரி மூன்றாவது முறையாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி 110 கேள்விகளுக்கு , சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo