பத்மபூஷன் விருது பெற்ற நல்லி குப்புசாமி முதலமைச்சருடன் சந்திப்பு

பத்மபூஷன் விருது பெற்ற நல்லி குப்புசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த நல்லி குப்புசாமி முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஜவுளித்துறை தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் பன்முகத்திறமையுடன் பல சாதனைகளை படைத்துள்ள நல்லி குப்புசாமி கலைமாமணி விருது, பத்மஶ்ரீ, முதலாளி-தொழிலாளி உறவு விருதுகளை இதற்கு முன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :