தவறாக பேசியிருந்தால், மன்னிப்பு கேட்டிருப்பேன் - கமல்

தவறாக பேசியிருந்தால், மன்னிப்பு கேட்டிருப்பேன் என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கமல், "கன்னட மொழி குறித்து நான் தவறாக பேசவில்லை. அப்படி தவறாக பேசியிருந்தால், மன்னிப்பு கேட்டிருப்பேன். தென் மாநில மொழிகள் மீதான எனது அன்பு உண்மையானது" என்று கூறியுள்ளார்.
Tags :