விமானநிலையத்தில் வேலை -9 இலட்சம் மோசடி-5 பேர் கைது.

விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் மோசடி செய்த 5 பேரை தமிழ்நாடு போலீசார் டெல்லியில் கைது செய்தனர். தேனி, விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் மோசடி செய்த 5 பேரை தமிழ்நாடு போலீசார் டெல்லியில் கைது செய்தனர். தேனியை சேர்ந்த வர ராஜலக்ஷ்மி,இவரது அலைபேசிக்கு 2020 ல் ஒரு குறும்செய்தி வந்துள்ளது.அதன் அடிப்படையில் அவர் தனது மகனுக்கு வேலைவாய்ப்புக்காக அவர்களிடம் பேசியுள்ளார்.விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அவர்கள் கேட்ட தொகை 9 லட்சத்தை அவர்களது கணக்கில் செலுத்தியுள்ளார். ரூபாய் செலுத்திய நிலையில் அந்தநபரின் செல்போன் ஆப் செய்யபபட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து பல மாதங்களாக முரசகித்து முடியாத நிலையில் அந்த நபர்கள் மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தேனி சைபர் கிரைம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றவாளிகள் ராஜா,அப்துல்சமது,கார்த்திக்,ரவிகிருஷ்ணன்,ரவி ஆகிய 5பேர் டெல்லியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து டெல்லிக்கு விரைந்த தனிப்படை போலீசார், 5 பேரை கைது செய்து அழைத்து வந்தனர். மோசடி செய்யப்பட்ட தொகை இன்னும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படும் நிலையில், முக்கிய குற்றவாளியான மாதேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :