பரப்பரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்

by Editor / 17-10-2022 09:34:00am
பரப்பரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சட்டப்பேரவை அலுவல் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு சட்டப்பேரவை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதேபோல் ஓபிஎஸ் தரப்பும் கடிதம் எழுதி இருக்கிறது.

அதேநேரத்தில், சட்டமன்றத்தை பொறுத்தவரையில் சட்டப்பேரவை தலைவரின் முடிவுதான் இறுதியானது என்றும் அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி, எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பார்கள். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்ட மசோதாவும் நிறைவேற்றப்படவுள்ளது.

 

Tags :

Share via