திகார் சிறையில் இன்று சரணடைகிறார் முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிறையில் சரணடைகிறார். மாலை 3 மணிக்கு அவர் திகார் சிறைக்கு செல்கிறார். மக்களவை தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அந்த கெடு இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் ஜூன் 5ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
Tags :