by Staff /
05-07-2023
04:28:43pm
சென்னை தண்டையாா்பேட்டையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தண்டையாா்பேட்டை நேருநகா் 14-ஆவது தெருவின் அருகே ரயில்வே தண்டவாளம் அருகே முட்புதரில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பாா்த்தனா்.உடனே அவா்கள், ஆா். கே. நகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்த நபா் யாா், எப்படி இறந்தாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Tags :
Share via