வடகொரியாவில் ஊரடங்கு
வடகொரியாவில் சுவாச நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் வரும் ஞாயிறு வரை அந்நாட்டு தலைநகர் பியாங்யாங்கில் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே இருக்கவும் உடல்வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவலால் ஊரடங்கு போடப்பட்டதாக வடகொரியா குறிப்பிடவில்லை. சுவாச நோய் பாதிப்புகளால்தான் ஊரடங்கு என்று தெரிவித்துள்ளது. அதனால் இது புதிய நோயா என உலக சுகாதார மையம் விளக்கம் கேட்டுள்ளது.
Tags :