பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி அறிவுறுத்தல்
சென்னை: பல்கலை. யில் ஆட்சிமன்ற, நிர்வாகக்குழு கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று ஆளுநர் ஆர். என். ரவி அறிவுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: பல்கலைக்கழகங்களில் கல்வியின் தரம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. இதற்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர். என். ரவி<br /> தலைமை வகித்தார். இதில் பல்வேறு பல்கலை. களின் ஆட்சிமன்ற, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (வேந்தர் பரிந்துரைத்தவர்கள்) கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பல்கலை. தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பல்கலை. களின் தன்னாட்சி நிலை குறைந்து வருகிறது. இதை சரிசெய்ய காலத்தின்.தேவைகளுக்கேற்ப பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை கொண்டுவர வேண்டும். மேலும், யுஜிசி வழிகாட்டுதல்களை தாமதமின்றி பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென உறுப்பினர்கள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின் ஆளுநர் ரவி, பல்கலை. உறுப்பினர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்விவரம் வருமாறு: பல்கலை. யில் ஆட்சிமன்ற, நிர்வாகக் குழு கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும். இந்த குழுக்களின் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் பகிரவேண்டும். பெரும்பாலான மாநில பல்கலைக்கழகங்களில் பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் இல்லை. அந்த பணியிடங்களுக்கு தற்காலிக பொறுப்பாளர்கள்தான் நியமிக்கப்படுகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த துணைவேந்தர்கள் கூட்டத்தில் பல்கலை. சட்டங்களின்படி பணியிடங்களை துரிதமாக நிரப்புவதற்கு அறிவுறுத்தப்பட்டது. சில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இல்லாமல் இருப்பதால், அதன் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் தேர்வு யுஜிசி விதிமுறைகளுடன் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுTags :