செப்.20ல் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்
மத்திய அரசின் செய்லபாடுகளை கண்டித்து செப்டம்பர் 20-ஆம் தேதி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போராட்டம்.
இதுதொடர்பாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த 20-ஆம் தேதி இந்திய அளவிலான எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற காணொளி கூட்டத்தில், வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம்,
பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத ஜனநாயக - விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
Tags :