மகாகவி பாரதியார் அவர்களின் 139-வதி பிறந்த நாள் நினைவாக மாபெரும் கவிதைப் போட்டி.

by Editor / 11-12-2021 02:44:23pm
மகாகவி பாரதியார் அவர்களின் 139-வதி பிறந்த நாள் நினைவாக மாபெரும் கவிதைப் போட்டி.

திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, நக்கீரன் குழுமத்தின் இலக்கிய இதழான இனிய உதயம் பத்திரிகையுடன் இணைந்து, மகாகவி பாரதியார் அவர்களின் 139-வதி பிறந்த நாள் நினைவாக மாபெரும் கவிதைப் போட்டியை அறிவித்தார். 16 வயதுக்கு உட்பட்ட படைப்பாளிகள் பங்கேற்கலாம் என்று அறிவித்து, இது இளைய பாரதியை இனங்காணும் முயற்சி என்று காணொளி வாயிலாகத் தனது வாழ்த்தைத் தெரிவித்தார். கவிதைகளை அறிவித்தபடி (29/11/2021) முதல் (06/12/2021) வரை பள்ளி மாணவ-மாணவி செல்வங்கள் அனுப்பியிருந்தார்கள். 

கவிதைகள் எண்ணிக்கை விவரம்: WhatsApp ,மின்னஞ்சல், தபால் (நக்கீரன் அலுவலகத்திற்கு) ஆகியவற்றின் மூலம் 2000-க்கும் மேற்பட்ட கவிதைகள் வந்திருக்கிறது.

மகாகவி பாரதியார் அவர்களின் 139-வது பிறந்தநாளான, (இன்று) டிசம்பர் 11-ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் - எட்டயபுரத்தில் அமைந்துள்ள பாரதியாரின் நினைவு மண்டபத்தில் பிரமாண்ட விழாவாக நடைபெற்றது .இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு (தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை) பரிசுப் பொருட்கள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

முதல் பரிசு ரூ.50,000 வெற்றிபெற்றவர் - பிரியா தர்ஷினி - மதர் தெர்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மைலாக்கோடு - கன்னியாகுமரி மாவட்டம்.
இரண்டாம் பரிசு ரூ.25,000 வெற்றிபெற்றவர் - தீபேஷ் வளன் இன்பராஜ், (வயது 12), ஏழாம் வகுப்பு, டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி, வரதராஜன்பேட்டை - அரியலூர் மாவட்டம்.
மூன்றாம் பரிசு ரூ.15,000 வெற்றிபெற்றவர் - கலீல் ஜிப்ரான் (வயது 14), ஒன்பதாம் வகுப்பு, செவன்த் டே மெட்ரிகுலேசன் பள்ளி, மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.
நான்காம் பரிசு ரூ.10000 வெற்றிபெற்றவர் - கார்த்திகை மலர் (வயது 14), பதினொன்றாம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, இளையரசனேந்தல் - திருநெல்வேலி மாவட்டம்.
ஐந்தாம் பரிசு ரூ.5,000 வெற்றிபெற்றவர் - தே.க.பாரதி (வயது 9), நான்காம் வகுப்பு, அரசினர் தொடக்கப்பள்ளி, அரியகோஷ்டி,பரங்கிப்பேட்டை ,கடலூர் மாவட்டம்.மேலும் ஆறுதல் பரிசாக 10 பேருக்குப் புத்தகத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், வரவேற்புரை - கவிஞர்.ஆரூர் தமிழ் நாடன், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அறிமுகவுரை - கனிமொழி கருணாநிதி எம்.பி, தலைமையுரை - நக்கீரன் கோபால், வாழ்த்துரை - அமைச்சர் கீதா ஜீவன் (சமூக நலன் - மகளிர் உரிமை துறை), அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் (மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை),விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன்,,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், போட்டி கவிதைகள் குறித்து  கவிஞர்.ஆண்டாள் பிரியதர்ஷினி உரையாற்றினார், நன்றியுரை - நவநீத கண்ணன் (கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர்).

மகாகவி பாரதியார் அவர்களின் 139-வதி பிறந்த நாள் நினைவாக மாபெரும் கவிதைப் போட்டி.
 

Tags :

Share via