மைக்ரோசாப்ட் நிறுவனம் மஜோரானா- 2 என்ற தனது அடுத்த தலைமுறை குவாண்டம் கணினி சிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் மஜோரானா- 2 என்ற தனது அடுத்த தலைமுறை குவாண்டம் கணினி சிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இது அதன் முந்தைய சிப்பான 'மஜோரானா 1' ஐ விட 1,000 மடங்கு அதிக நம்பகத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மை கொண்டது
இந்த சிப்பை வடிவமைப்பதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்ற ஏஜென்டிக் ஏஐ தளம் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது.
குவாண்டம் கணினிகளின் அடிப்படை அலகான குவிட்களின் ஆயுட்காலம் மிகக் குறைவு.
சிறிய வெப்பநிலை மாற்றம் அல்லது அதிர்வு கூட பிழைகளை ஏற்படுத்தும்.
முந்தைய மஜோரானா 1 சிப்பில் பயன்படுத்தப்பட்ட 'அலுமினியம்' சூப்பர் கண்டக்டருக்குப் பதிலாக, இதில் 'ஈயம்' பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இன்டியம் ஆர்சனைடு மற்றும் இன்டியம் ஆர்சனைடு ஆண்டிமோனைடு ஆகிய வேதிப்பொருட்களின் கலவையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
முந்தைய சிப்பில் குவிட்களின் ஆயுட்காலம் வெறும் 1 முதல் 12 மில்லிசெகண்டுகள் மட்டுமே நீடித்தது.
ஆனால், புதிய மஜோரானா 2 சிப்பில் குவிட்களின் சராசரி ஆயுட்காலம் 20 வினாடிகளுக்கு மேல்நீடிக்கிறது. சில குவிட்களின் ஆயுள் 1 நிமிடம் வரை நீடிப்பதால், இது 1,000 மடங்குக்கும் மேலான மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த அசாத்திய நம்பகத்தன்மை காரணமாக, வணிக ரீதியாகப் பயன்படுத்தக்கூடிய முழுமையான குவாண்டம் சூப்பர் கணினியை உருவாக்கும் தங்களின் முந்தைய காலக்கெடுவை மைக்ரோசாப்ட் பாதியாகக் குறைத்துள்ளது.
அதன்படி, வரும் 2029 ஆம் ஆண்டிற்குள்ளேயே நடைமுறைக்கு சாத்தியமான குவாண்டம் கணினியை உருவாக்கிவிட முடியும் என்று குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
.இந்த தொழில்நுட்பம் முழுமையடையும் போது, தற்போதுள்ள சூப்பர் கணினிகளால் கூட தீர்க்க முடியாத மைக்ரோ பிளாஸ்டிக்ஸை அழிப்பது, கண்டறிவது போன்ற உலகளாவிய சிக்கல்களுக்கு சில நிமிடங்களில் தீர்வு காண முடியும்.
Tags :



















