நாம் தமிழர் கட்சித் தலைவர்  சீமானின் தந்தை காலமானார்

by Editor / 13-05-2021 04:13:49pm
 நாம் தமிழர் கட்சித் தலைவர்  சீமானின் தந்தை காலமானார்



நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். சீமானின் சொந்த ஊரான அரணையூரில் அவர் உயிரிழந்ததாக நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் பதிவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம். இடம்: அரணையூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தையை இழந்த சீமானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசியல் கட்சியினர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

Tags :

Share via

More stories

Logo