அஜித்குமார் தாய்க்கு EPS ஆறுதல்

சிவகங்கையில் போலீஸ் விசாரணையின் போது இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த நிலையில் அவர் தாயாரிடம் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் தெரிவித்தார். "நீதி கிடைக்கும் வரை அதிமுக போராடும். இது உங்களுக்கு மீள முடியாத துயரம். தைரியமாக இருங்கள். எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன். தாய் தனது மகனை இழப்பது கொடுமையான விஷயம். நீதிமன்றம் மூலம் நீதி நிலை நாட்டப்படும்" என்றார்.
Tags :