வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ - 100 ஏக்கர் பரப்பிலான அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து நாசம்.

by Editor / 05-03-2023 09:54:16am
வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ - 100 ஏக்கர் பரப்பிலான அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து நாசம்.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளானது ஏராளமான அரிய வகை தாவரங்கள், மூலிகை மரங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் பல்லுயிர் வன உயிரினங்கள் வாழும் வாழிடமாக திகழ்ந்துவரும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக திகழ்ந்து வருகிறது.

 இப்படிபட்ட, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக, மலைப்பகுதிகளில் உள்ள மூலிகை செடிகள், மரங்கள் உள்ளிட்டவைகள் காய்ந்த நிலையில் காணப்பட்டு வருகின்றன.

 இப்படி காய்ந்த நிலையில் காணப்பட்டு வரும் மரங்கள், செடிகளில் அவ்வப்போது தீப்பற்றி ஏறிவது என்பது தொடர் கதையாகி வருகிறது.

 குறிப்பாக, மர்ம நபர்கள் சிலர் இந்த தீ விபத்தை அரங்கேற்றி விடுவதாகவும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்படும் சூழலில், தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எறியத் தொடங்கியுள்ளது.

 இதை பார்த்த அப்பகுதியில் வசித்து வருபவர்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கவே, வனத்துறையினர் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 ஆனால் தீயானது கட்டுக்குள் வராமல் காற்றின் வேகம் காரணமாக தொடர்ந்து பரவி சுமார் 100 ஏக்கர் பரப்பிலான காடுகள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ - 100 ஏக்கர் பரப்பிலான அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து நாசம்.
 
Tags :

Share via