உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம்.. பள்ளி மாணவர்களின் அட்டூழியம்

by Editor / 02-07-2025 02:34:01pm
உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம்.. பள்ளி மாணவர்களின் அட்டூழியம்

கள்ளக்குறிச்சியில் இருந்து மையனூர் செல்லும் அரசுப் பேருந்தில், பள்ளி மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மையனூர் பகுதியைச் சேர்ந்த பலரும் மாலை நேரத்தில் ஒரே பேருந்தை பயண்படுத்துவதால் அதிக கூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியடியும், ஜன்னல் கம்பிகளில் ஏறியபடியும் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். இதனை பேருந்து ஓட்டுநர் தட்டிக் கேட்டும் மாணவர்கள் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

 

Tags :

Share via